சிறுகதை - வியாழக்கிழமை விரதம்
சிறுகதை - வியாழக்கிழமை விரதம் எங்க அப்பா ரெம்ப கடவுள் பக்தி உள்ள ஆள் கிடையாது…..ஏதோ கோயில் போவா….ஒரே ரௌண்டுலே எல்லா சாமிக்கும் ஒரு பெரிய ஹாய் சொல்லுவா ...போனோமா வந்தோமான்னு ஷார்ப்பா இருப்பா ...கடவுள்ட்டேயே உடம்ப நல்ல பாத்துக்கோ பா ன்னு சொல்லிட்டு வருவா…...அவ்வளவு தான் …… செமையா ஜோக் அடிப்பா ….எங்க அப்பா ஜோக்கை கேக்கவே ஒரு பெரிய குரூப் எங்க அப்பா குடும்பத்துலே உண்டு …..நானும் என் தம்பியும் எங்க அப்பபோவோட டைமிங் ஜோக்க்கு பெரிய விசிறிகள்…. அப்படி பக்தி குறைவா இருந்த ஆள் கடந்த 4 வருசமா எல்லா வியாழக்கிழமையும் சாய் பாபா விரதம் இருக்கா ...அதுக்கு நான் தான் காரணம்….உடல் நலக் குறைவால் சில வருஷத்துக்கு முன் ரெம்ப கஷ்ட பட்டு மீண்டு வந்தேன் ....நம்ம இதயத்தை மீறி எந்த கடவுளும் கிடையாதுன்னு சொல்லுற குரூப் ஆளு நான் …..அதனால எனக்கு வேண்டி எங்க அப்பா இந்த விரதத்தை இருக்கா …. முன்னாடி எப்படி எங்க அப்பா ஒழுக்கமா விரதம் இருந்தான்னு எனக்கு தெரியாது….நல்ல இருந்திருப்பாங்கன்னு நம்புறேன் ….ஆனா இப்ப கொரோனா லாக் டவுன்லே எப்படி விரதம் இருக்கான்னு அழகா பாக்கிற கொடுப்பினை கிடைத்தது இந்த பக்த...