சிறுகதை - நடைபயிற்சி
சிறுகதை - நடைபயிற்சி வேலைப்பளு, மனஅழுத்தம், எரிச்சல், சோம்பறித்தனம்…...போதாதற்கு வெயில், வெக்கை அப்புறம் கொரோனா ஊரடங்கு சட்டம் ..…..வெளியே போகவும் முடியல….வெளிய சொல்லவும் முடியல…. இப்படியே கடந்த சில வாரங்கள் ஓடியது… மூச்சு பயிற்சி, யோகா செய்து பாத்தேன்...கொஞ்சம் பரவாயில்லை..ஆனாலும் மனஅழுத்தம் குறையவில்லை… டக்குனு முடிவு பண்ணுனேன்...நாளைக்கு காலையிலே வாக்கிங் கண்டிப்பாக போக வேண்டும்ன்னு… வேலை முடிய இரவு 11 மணி..அப்படி இப்படின்னு தூங்க இரவு 12.30 மணி ஆயிடிச்சு…. காலையிலே எழுந்திரிச்சது மணி 8.15...விளங்கி போச்சு….ஆனாலும் விடலே…. வெயிலு சும்மா சொய்ங்க்ன்னு அடிச்சுது …. போட்டேன் மாஸ்க்கை, தொப்பியை , Rayban கண்ணாடியை .…...நல்ல தெரியும் இந்த பாளையங்கோட்டை பயலுக நம்மல ஒருமாதிரி தான் பாப்பான்…...ஏன்ன நம்மளும் சும்மா இல்ல.....ஒரு பயலையும் விடாம கேலி கிண்டல் பண்ணிருக்கோம் …....யாராவது நம்மல கிறுக்கன்,உச்ச கிறுக்கன்னு நினைப்பாங்களோன்னு ஒரு சந்தேகம்...….உள்ள இருந்து ஒரு குரல்..….38 வயசு நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணு தான் ….எவன் நம்மள பத்தி என்ன நினைச்சாலும் உ...