Posts

சிறுகதை - நடைபயிற்சி

சிறுகதை - நடைபயிற்சி  வேலைப்பளு, மனஅழுத்தம், எரிச்சல், சோம்பறித்தனம்…...போதாதற்கு  வெயில், வெக்கை அப்புறம் கொரோனா ஊரடங்கு சட்டம் ..…..வெளியே போகவும்  முடியல….வெளிய சொல்லவும் முடியல…. இப்படியே கடந்த சில வாரங்கள் ஓடியது… மூச்சு பயிற்சி, யோகா செய்து பாத்தேன்...கொஞ்சம் பரவாயில்லை..ஆனாலும் மனஅழுத்தம் குறையவில்லை… டக்குனு முடிவு பண்ணுனேன்...நாளைக்கு காலையிலே வாக்கிங் கண்டிப்பாக போக வேண்டும்ன்னு… வேலை முடிய இரவு 11 மணி..அப்படி இப்படின்னு தூங்க இரவு 12.30 மணி ஆயிடிச்சு…. காலையிலே எழுந்திரிச்சது மணி 8.15...விளங்கி போச்சு….ஆனாலும் விடலே…. வெயிலு சும்மா சொய்ங்க்ன்னு அடிச்சுது …. போட்டேன் மாஸ்க்கை, தொப்பியை , Rayban கண்ணாடியை .…...நல்ல தெரியும் இந்த பாளையங்கோட்டை பயலுக நம்மல ஒருமாதிரி தான் பாப்பான்…...ஏன்ன நம்மளும் சும்மா இல்ல.....ஒரு பயலையும் விடாம கேலி கிண்டல் பண்ணிருக்கோம் …....யாராவது நம்மல கிறுக்கன்,உச்ச கிறுக்கன்னு நினைப்பாங்களோன்னு ஒரு சந்தேகம்...….உள்ள  இருந்து ஒரு குரல்..….38 வயசு நமக்கு கத்து  கொடுத்தது ஒண்ணே ஒண்ணு  தான் ….எவன் நம்மள பத்தி என்ன நினைச்சாலும் உ...

சிறுகதை - கதவு

Image
சிறுகதை - கதவு: வீட்டுல கொஞ்சம் சின்ன மர வேலை. 2 ஊஞ்சல் மற்றும் ஓரு ஷெல்ஃப் செய்யவேண்டும். கொரோனா மத்தியிலே எந்தா ஆசாரி கிடைக்க போறார்ன்னு நான் நினைச்சன் … கொரோனாக்கே பரோட்டா கொடுத்து எங்கா ஆப்பா ஆசாரியே  கூட்டிட்டு வந்திட்டா ... அந்த  ஆசாரியே பாக்க ஏதோ கோயிலுலே நேந்து விட்ட ஆடு போலவே என் கண்ணுலே தெரிஞ்சார்…. அவரிடம்  தேவைகளை  அம்மா சொன்னாங்க ... அவரு பாவம், பேனா, பென்சில் மற்றும் சாக் பீஸ் வச்சு என்னலோமோ படம் வரைச்சார் , கணக்கு போட்டார் ... எனக்கு மனசுலே ஓடினது இதுதான் "நீரு தங்கா பேணா  வச்சு கணக்கு போட்டாலும் உமக்கு எங்கா அம்மா ஓரு கணக்கு சொல்லுவா ...ஆதுதன் நடக்க போகுதுண்ணு ”.. ஆசாரி கணக்கு  வழக்கெல்லாம் பாத்து - "செஞ்சிரலாம்னு சொன்னார்ர்"..யாரென்னு நான் கேட்டேன் ... இல்ல தம்பி... சூப்பரா ஊஞ்சல் மற்றும் ஷெல்ஃப் செஞ்சிரலாம்ன்னார்.. செய்றது இருக்கட்டும்... எவ்வளவு ஆகும்??..அம்மாவின் கேள்வி …. சூப்பரா செய்ய 10,000 ரூபா ஆகும்னு சொன்னார்…மழை இல்லாத பாளையங்கோட்டையில் இடி இடிச்ச சத்தம் கேட்டது மாதிரி அம்மா முகத்துல ஒரு வெளிப்பாடு... என்னது 10,0000 மா ... என்ன...

சிறுகதை - வியாழக்கிழமை விரதம்

சிறுகதை - வியாழக்கிழமை விரதம்  எங்க அப்பா ரெம்ப கடவுள் பக்தி உள்ள ஆள் கிடையாது…..ஏதோ கோயில் போவா….ஒரே ரௌண்டுலே எல்லா சாமிக்கும் ஒரு பெரிய ஹாய் சொல்லுவா ...போனோமா வந்தோமான்னு ஷார்ப்பா  இருப்பா ...கடவுள்ட்டேயே உடம்ப நல்ல பாத்துக்கோ பா ன்னு சொல்லிட்டு வருவா…...அவ்வளவு தான் …… செமையா ஜோக் அடிப்பா ….எங்க அப்பா ஜோக்கை கேக்கவே ஒரு பெரிய குரூப் எங்க அப்பா குடும்பத்துலே உண்டு …..நானும் என் தம்பியும் எங்க அப்பபோவோட டைமிங் ஜோக்க்கு  பெரிய விசிறிகள்…. அப்படி பக்தி குறைவா இருந்த ஆள் கடந்த 4 வருசமா எல்லா வியாழக்கிழமையும் சாய் பாபா விரதம் இருக்கா ...அதுக்கு நான் தான் காரணம்….உடல் நலக்  குறைவால் சில வருஷத்துக்கு முன் ரெம்ப கஷ்ட பட்டு மீண்டு வந்தேன் ....நம்ம இதயத்தை மீறி எந்த கடவுளும் கிடையாதுன்னு சொல்லுற குரூப் ஆளு நான் …..அதனால எனக்கு வேண்டி எங்க அப்பா இந்த விரதத்தை இருக்கா …. முன்னாடி எப்படி எங்க அப்பா ஒழுக்கமா விரதம் இருந்தான்னு எனக்கு தெரியாது….நல்ல இருந்திருப்பாங்கன்னு நம்புறேன் ….ஆனா இப்ப கொரோனா லாக் டவுன்லே எப்படி விரதம் இருக்கான்னு அழகா பாக்கிற கொடுப்பினை கிடைத்தது இந்த பக்த...