சிறுகதை - கதவு
சிறுகதை - கதவு:
வீட்டுல கொஞ்சம் சின்ன மர வேலை. 2 ஊஞ்சல் மற்றும் ஓரு ஷெல்ஃப் செய்யவேண்டும்.
கொரோனா மத்தியிலே எந்தா ஆசாரி கிடைக்க போறார்ன்னு நான் நினைச்சன் …
கொரோனாக்கே பரோட்டா கொடுத்து எங்கா ஆப்பா ஆசாரியே கூட்டிட்டு வந்திட்டா ... அந்த ஆசாரியே பாக்க ஏதோ கோயிலுலே நேந்து விட்ட ஆடு போலவே என் கண்ணுலே தெரிஞ்சார்….
அவரிடம் தேவைகளை அம்மா சொன்னாங்க ... அவரு பாவம், பேனா, பென்சில் மற்றும் சாக் பீஸ் வச்சு என்னலோமோ படம் வரைச்சார் , கணக்கு போட்டார் ... எனக்கு மனசுலே ஓடினது இதுதான் "நீரு தங்கா பேணா வச்சு கணக்கு போட்டாலும் உமக்கு எங்கா அம்மா ஓரு கணக்கு சொல்லுவா ...ஆதுதன் நடக்க போகுதுண்ணு ”..
ஆசாரி கணக்கு வழக்கெல்லாம் பாத்து - "செஞ்சிரலாம்னு சொன்னார்ர்"..யாரென்னு நான் கேட்டேன் ... இல்ல தம்பி... சூப்பரா ஊஞ்சல் மற்றும் ஷெல்ஃப் செஞ்சிரலாம்ன்னார்..
செய்றது இருக்கட்டும்... எவ்வளவு ஆகும்??..அம்மாவின் கேள்வி ….
சூப்பரா செய்ய 10,000 ரூபா ஆகும்னு சொன்னார்…மழை இல்லாத பாளையங்கோட்டையில் இடி இடிச்ச சத்தம் கேட்டது மாதிரி அம்மா முகத்துல ஒரு வெளிப்பாடு...
என்னது 10,0000 மா ... என்ன சொல்லுறீங்க...பய புள்ள ஆசாரி கொஞ்சம் மிரண்டு தான் போனார்…
மறுபடியும் பேணா, பென்சில், சாக் பீஸ்...கணக்கு போட்டார், போட்டிட்டா இருந்தார்...கணக்கு வாத்தியராவே ஆயிண்டார்...என்ன ப்ரஜனோம்???
அப்புறம் 8,000 த்துக்கு செய்யலாம்னார்….
அப்புறம் 8,000 த்துக்கு செய்யலாம்னார்….
அம்மா அது ரெம்ப கூடன்னு சொன்னாங்கா...ஆசாரி --"அம்மா மர விலை எல்லாம் ஏறி போயிடிச்சு மா...இப்போ சரக்கு வரத்தே கிடையாது...கொஞ்சம் பாத்து சொல்லுங்கா"...
சரக்காவது.. முறுக்காவது ...பாத்து சொன்னாலும் சரி பாக்காம சொன்னாலும் சரி..2 சூப்பர் ஊஞ்சல் என் பேரா புள்ளைங்களுக்கு அப்புறம் ஒரு ஷெல்ப் செய்ய 5,000 தருவேன்….2 நாளுலே செய்து கொடுத்துறீங்க…..
என்ன நினைச்சாரோ..ஆசாரி... ஒத்துண்டார்….:)
இன்னைக்கு காலையிலே முதல்லே கொஞ்சம் மரத்த சைக்கிள்லே கொண்டு வந்து போட்டார்..அது ஊஞ்சலுக்கு ….
அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு பழைய கதவை கொண்டு வந்து போட்டார்...இதை ஏன் இங்க கொண்டு வந்து போட்டிருக்கார்ன்னு எனக்கு ஒரே யோசனை...அப்புறம் தான் தெரிஞ்சிது அது கிச்சன் ஷெல்ப் க்கு...ராமா ராமா….
பயபுள்ள ஆசாரி ..பாவம்..அவர் வீட்டு கதவே புடுங்கி இங்க ஷெல்ப் செய்ய கொண்டு வந்திட்டாராய்யா வந்துட்டாரு…...
இப்பொழுது மறுபடியும் …(மேல் உள்ள படத்தை உற்று கவனிக்கவும்…)
--வேல்

Comments
Post a Comment