சிறுகதை - நடைபயிற்சி
சிறுகதை - நடைபயிற்சி
வேலைப்பளு, மனஅழுத்தம், எரிச்சல், சோம்பறித்தனம்…...போதாதற்கு வெயில், வெக்கை அப்புறம் கொரோனா ஊரடங்கு சட்டம் ..…..வெளியே போகவும் முடியல….வெளிய சொல்லவும் முடியல….
இப்படியே கடந்த சில வாரங்கள் ஓடியது…
மூச்சு பயிற்சி, யோகா செய்து பாத்தேன்...கொஞ்சம் பரவாயில்லை..ஆனாலும் மனஅழுத்தம் குறையவில்லை…
டக்குனு முடிவு பண்ணுனேன்...நாளைக்கு காலையிலே வாக்கிங் கண்டிப்பாக போக வேண்டும்ன்னு…
வேலை முடிய இரவு 11 மணி..அப்படி இப்படின்னு தூங்க இரவு 12.30 மணி ஆயிடிச்சு….
காலையிலே எழுந்திரிச்சது மணி 8.15...விளங்கி போச்சு….ஆனாலும் விடலே….
வெயிலு சும்மா சொய்ங்க்ன்னு அடிச்சுது ….
போட்டேன் மாஸ்க்கை, தொப்பியை , Rayban கண்ணாடியை .…...நல்ல தெரியும் இந்த பாளையங்கோட்டை பயலுக நம்மல ஒருமாதிரி தான் பாப்பான்…...ஏன்ன நம்மளும் சும்மா இல்ல.....ஒரு பயலையும் விடாம கேலி கிண்டல் பண்ணிருக்கோம் …....யாராவது நம்மல கிறுக்கன்,உச்ச கிறுக்கன்னு நினைப்பாங்களோன்னு ஒரு சந்தேகம்...….உள்ள இருந்து ஒரு குரல்..….38 வயசு நமக்கு கத்து கொடுத்தது ஒண்ணே ஒண்ணு தான் ….எவன் நம்மள பத்தி என்ன நினைச்சாலும் உனக்கு தோணுனதே நீ செய்…...எந்த காரணத்துக்காகவும் உன் attitude எ விட்டு கொடுக்காதே.....வாக்கிங்க்கு இவ்வளவு சொற்பொழிவு தேவையில்லை தான்...ஆனா எனக்கு இது தேவைப்பட்டது…..
காலை 9.15 மணிக்கு வாக்கிங் போக வீட்டில் இருந்து இறங்கினேன் .....பக்கத்து வீட்டு மாமா ஒரு மாதிரி பாத்தாங்கா…...ஏன்னா நம்மலே பாக்க கொள்ளை கூட்ட தலைவன் லுக்கு ….அப்புறம் வாக்கிங் டிரஸ்…..என்ன தம்பி சாமான் வாங்க கடைக்கு போறீங்களான்னு கேட்டாங்கா …..இல்ல மாமா சாமான் எங்கிட்ட பத்திரமா இருக்கு ..இப்போ வாக்கிங் போரேன்ன்னு சொன்னேன் ….மாமா தலையை சொறிஞ்சிகிட்டே வீட்டுக்குள்ளே போயிட்டாங்கா ...என் மனசுக்குள்ளே "உம்மே சோலியே பாக்க வேண்டியது தானே மாமா "!!!
எல்லோரும் நம்மலேயே குறுகுறுன்னு பாக்கிறது மாதிரி ஒரு பீலிங்….எதையும் பொருட்படுத்தலை …..வேகமா நடந்தேன்...
நமக்கு பரிச்சியமான சில முகங்கள், இடங்கள்..….பழைய ஸ்கூல், காலேஜ் லைப் க்கு மனசு போனது….
நடந்தேன் …..நடந்தேன் ……
மட்டன் கறி கடை..….வெளியே ஒரு சின்ன ஆடு …."I am waiting" ன்னு நிக்குது ….கறி கடையை உள்ளே எட்டி பார்தேன்...கறி வாங்க இல்ல ….எவ்வ்ளவு நேரம் வெளிய இருக்கிற ஆடு உசுரோட இருக்க போகுதுன்னு பாக்க….15 நிமிஷத்துக்கு மேல வாய்ப்பில்லைன்னு தோணிச்சு …….ஆட்டுக்கு ஒரு ஆல் தி பெஸ்ட் ன்னு சொல்லிட்டு போயிட்டேன்……
ரோடு ஓரமா நிறைய தற்காலிக காய்கறி, பழ கடைகள்….
ஒரு வயசான பாட்டி வெள்ளரி பிஞ்சு வித்துக்கிட்டு இருந்தாங்க...என்னவோ அவங்களுக்காக வாங்கணும்னு தோணிச்சு ...போய் விலை கேட்டு வாங்கினா பை இல்ல, பாட்டிட்ட ஒரு பேப்பர் கூட இல்ல ….ஏன் தம்பி ஒரு பை கொண்டு வர கூடாதான்னு கேட்டாங்க ….அது ஒண்ணு தான் கொண்டு வரல பாட்டின்னு சொன்னேன் …...
வாங்கின வெள்ளரியே எப்படி வீட்டுக்கு கொண்டு சேக்கறதுன்னு தெரியல …..பக்கத்து கடையிலே பொருள் ஒண்ணும் வாங்காம பேப்பர் கேக்க மனசு இல்ல…..
அப்புறம் ஒரு பழ கடையிலே பேப்பர்க்காக 1 kg மாம்பழம் வாங்கினேன்….ஒரு எக்ஸ்ட்ரா பேப்பர் கேட்டு வாங்கினேன்…..அப்புறம் பாட்டிட்ட அந்த வெள்ளரி எ மடக்க சொன்னேன்.....சரியாகவில்லை…. அவங்ககிட்ட கொடுத்துக்கிட்டு பை வாங்கிட்டு வாரேன்னு சொன்னேன் ...அந்த பாட்டி நம்மளே பாவமா பாத்தாங்க ….
மனசுக்குள்ள என்னைய நானே மாங்கான்னு சொல்லிக்கிட்டேன் ..கையில் மாங்கா வேற இருக்கு …:)
இப்போ வேற வழியே இல்ல...பக்கத்து ஆவின் கடையிலே போய் நின்னேன் ...ஏதாவது கவர் இருந்தா கொடுங்கண்னே ...காசு வேணும்னாலும் தந்திடுறேன்னு சொன்னேன் ...நல்ல மனுஷன்... நல்ல துணி பை ஒண்ணே பிரீ ஆக தந்தார் ….பிரீ ஆக தந்தால் எல்லாவனும் நல்ல மனுஷன் தானே ….
பையோட போய் பாட்டிட்ட போய் நின்னேன் …..பாட்டி முகத்துல என்ன ஒரு சந்தோஷம்....இந்தா தம்பின்னு கூட 2 வெள்ளரி கொண்டு போன்னு கொடுத்தங்கா …....அப்ப்பப்பா …..என்ன ஒரு பீலிங்...…
கடைசியிலே தொப்பி , கண்ணாடி, மாஸ்க், வெள்ளரி, ,மாம்பழதோட மாங்கா நான் வீடு வந்து சேந்தேன் …..
மனசு ரெம்ப லேசாயிடிச்சு…….நம்ம பையன் சொல்லறது மாதிரி நானும் சொல்லிக்கிட்டேன் …..
நான் சாதிச்சிட்டேன்!!!!!!!
--வேல்
Comments
Post a Comment