சிறுகதை - வியாழக்கிழமை விரதம்

சிறுகதை - வியாழக்கிழமை விரதம் 

எங்க அப்பா ரெம்ப கடவுள் பக்தி உள்ள ஆள் கிடையாது…..ஏதோ கோயில் போவா….ஒரே ரௌண்டுலே எல்லா சாமிக்கும் ஒரு பெரிய ஹாய் சொல்லுவா ...போனோமா வந்தோமான்னு ஷார்ப்பா  இருப்பா ...கடவுள்ட்டேயே உடம்ப நல்ல பாத்துக்கோ பா ன்னு சொல்லிட்டு வருவா…...அவ்வளவு தான் ……

செமையா ஜோக் அடிப்பா ….எங்க அப்பா ஜோக்கை கேக்கவே ஒரு பெரிய குரூப் எங்க அப்பா குடும்பத்துலே உண்டு …..நானும் என் தம்பியும் எங்க அப்பபோவோட டைமிங் ஜோக்க்கு  பெரிய விசிறிகள்….

அப்படி பக்தி குறைவா இருந்த ஆள் கடந்த 4 வருசமா எல்லா வியாழக்கிழமையும் சாய் பாபா விரதம் இருக்கா ...அதுக்கு நான் தான் காரணம்….உடல் நலக்  குறைவால் சில வருஷத்துக்கு முன் ரெம்ப கஷ்ட பட்டு மீண்டு வந்தேன் ....நம்ம இதயத்தை மீறி எந்த கடவுளும் கிடையாதுன்னு சொல்லுற குரூப் ஆளு நான் …..அதனால எனக்கு வேண்டி எங்க அப்பா இந்த விரதத்தை இருக்கா ….

முன்னாடி எப்படி எங்க அப்பா ஒழுக்கமா விரதம் இருந்தான்னு எனக்கு தெரியாது….நல்ல இருந்திருப்பாங்கன்னு நம்புறேன் ….ஆனா இப்ப கொரோனா லாக் டவுன்லே எப்படி விரதம் இருக்கான்னு அழகா பாக்கிற கொடுப்பினை கிடைத்தது இந்த பக்தாளுக்கு….

விரதம் கோட்பாடுகள் இது தான்:
1) காலை முதல் மாலை வரை ஒண்ணும் சாப்பிட கூடாது …..
2) ஒண்ணும்னா சோறு , இட்லி, தோசை சாப்பிட கூடாது ...ஆனா பழம் , பிஸ்கட் , பிரட் , பால் , டி , சூப் எல்லாம் சாப்பிடலாம் போல ….:)
3) அப்புறம் சாய்ங்காலம் தீபாராதனை பண்ணிட்டு, சாமி கும்பிட்டுட்டு விரதத்தை முடிக்கணும்…(தோசை - சோறு சாப்பிடலாம்)

எங்க அம்மாட்ட கேட்டேன் ..பாவம் அப்பா...எப்படி தான் இப்படி எல்லா வியாழக்கிழமையும் விரதம் இருக்களோன்னு…...அப்பா really great ன்னும், என்னாலெல்லாம் இப்படி ஒரு வேளை கூட சாப்பிடாம இருக்க முடியாதுன்னு சொன்னேன் ....அதுக்கு எங்க அம்மா அசால்ட்டா இதெல்லாம் ஒரு பெரிய விஷயமான்னு ஈசி ஆ சொல்லிட்டா ….பொதுவா  எங்க அப்பா செய்ற எந்த நல்ல காரியங்களுக்கும்  பாராட்டி பரிசு கொடுத்தது கிடையாது எங்க அம்மா ….அதனாலே அப்படி சொல்லுறாங்கன்னு நான் எங்க அம்மாவே "மனுஷன்னா பாராட்ட தெரியணும் , recognize பண்ண தெரியணும் ….இரக்கம் வேணும்ன்னு கொஞ்சம் dialague எல்லாம் எல்லாம் பேசி சத்தம் போட்டேன்" சரிதான் போடான்னு எங்க அம்மா போயிட்டா ...

எங்க வீட்டுல எங்க அப்பாவுக்கு ஒரு மர அலமாரி உண்டு ...எங்க அப்பாவோட best friend அந்த அலமாரி தான் ..ஆ ஊன்னா சம்மணம் போட்டு ஒரு நாளைக்கு 3 மணி நேரம் அதே  திறந்துகிட்டு, நோண்டிகிட்டு இருப்பா …. அடுக்குவா, அப்புறம்  கலைப்பா, அப்புறம் அடுக்குவா …அப்பொப்ப எங்க அப்பா வாய் அசை போடும்…...but சும்மா சொல்ல கூடாது அலமாரி அவ்வளவு நீட்டா  இருக்கும் ...அந்த மாதிரி நீட்னஸ் எங்கேயும் பாக்க முடியாது ....அதே திறந்தாலே ஒரு நல்ல மண் வாசனை (மன்னிக்கவும்) பத்தி  வாசனை வரும் …இதை இப்போ எழுதும் போது  கூட எங்க அப்பா அலமாரியே நோண்டிக்குட்டு தான் இருக்கா ….

எங்க அம்மா எங்க அப்பா இல்லாத சமயத்துல  டக்குனு வந்து எங்கிட்டே  அப்போ ரெம்ப பேசினயே ...போய் அப்பா அலமாரியே  திறந்து பாருன்னு சொன்னா …..அது என்ன அலாவுதீன் அற்புத விளக்கா ..சும்மா திறந்து திறந்து பாத்து தேய்க்கறதுக்கு ன்னு சொல்லிட்டு திறந்து பாத்தா  அப்படியே  ஷாக் ஆயிட்டேன் ….கீழ் அடுக்குலே கொஞ்சம் டிரஸ் அப்புறம் 2 பெரிய டப்பா ….ஒரு டப்பாலே cream பிஸ்கட்,  இனியொரு டப்பாலே cream இல்லாத பிஸ்கட் ….ஆயில் free ஸ்னாக்ஸ் ஷெல்ப்பாம் அது ….

அப்புறம் மேல் ஷெல்ப்லே கடலை மிட்டாய், அல்வா  மிச்சர், காரச்சேவு - இது ஆயில் free இல்லாத ஷெல்ப்பாம் …

அப்புறம் ஒரு சீப் பழம், ஆரஞ்சு ன்னு எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ்…..

அட பாவி மக்கா  ..ஒரு சின்ன சூப்பர் மார்க்கெட்யே அங்க பாத்தேன் ....எனக்கு அத  பாத்து பாத்து சிரிப்பு தாங்கலே ....அது தான் எங்க அப்பா வாய் எப்போ பாத்தாலும் அசை போட்டுக்குட்டே இருக்குதுங்கிற  காரணத்தை கண்டுபுடிச்சேன் …

நான் ஒண்ணும் பாத்தது மாதிரியும் தெரிந்தது மாதிரியும் காட்டி கிடலை….full day CID போல நோட் பண்ணுனேன் ….அது போய்கிட்ட இருந்திச்சு ….அலமாரி திறக்கிறது என்ன ….வாய் அசை போடுறது என்ன …...அப்புறம் டீ குடிக்கிறது என்னன்னு... இதுக்கு மேல சாயங்காலம் விரதம் ன்னு ஒண்ணே முடிக்க வேற செய்யனும் வேற  …..நான் குசும்புக்கு சிரிப்பை அடக்கிட்டு எப்படி பா இப்படி உங்களாலே எல்லா வாரமும் விரதம் இருக்க முடியுதுன்னு கேட்டேன் ….பக்தி மற்றும் பழக்கம் தான்ன்னு சொன்னா ......நல்ல பக்தி பழக்கம் கணேசான்னு நினைச்சிட்டு போயிட்டேன்  ….

இனி தான் high light ….

சாயங்காலம் தீபாராதனை முடிச்சாச்சு ...எங்க அம்மா அப்பாக்கு விரதத்தை முடிச்சு தோசை சுட ஆரம்பிச்சா …..உண்மையா விரதம் இருந்தவனாலே அந்த கோர பசிக்கு ஒரு 10 தோசை சாப்பிட முடியும் ….எங்க அப்பா மெதுவா எனக்கு 2 தோசை போதும் அதுக்கு மேல சுட வேண்டாம்ன்னு சொன்னா ...நக்கலா என்னப்பா இப்படி சொல்லுறீங்க, காலையிலே இருந்து ஒண்ணும் சாப்பிடாம இருந்திருக்கீங்க ...நல்ல சாப்பிடுங்கன்னு சொன்னேன் .....பசி இல்லை..பசி மந்திடிச்சிடிச்சு, நேரம் ஆச்சுல்ல.. என்ன செய்ய முடியும்ன்னு கூச்சப்படாம சொன்னா ….குபீர் சிரிப்பை அடக்கிட்டு எப்படி பா பசிக்கும் உங்களக்கு ….லேசு பட்ட ஐட்டங்களா வாயிலே போயிருக்கு ……பட் அந்த நேர்மை எனக்கு ரெம்ப புடிச்சிருந்தது ...

ஸத் குரு சாய் பாபாக்கு ஜெய் ….!!!!

--வேல்

Comments

  1. Ennala serippai adakavae mudiyala.. saibaba ku Jaaai

    ReplyDelete
  2. Haha! Vellapa! Unga appa nallavangala? Kaytavangala? Ting ting ting ting tin tin uuu.

    ReplyDelete
  3. Good writing...keep up Vels 👏👏

    ReplyDelete
  4. Ha ha ha 😂 nice...kadala mittai viratham vaalga...jai mixture viratham🙏

    ReplyDelete
  5. A very simple grand presentation ! Expecting more.

    ReplyDelete
  6. 🤣🤣🤣🤣Sai baba ku jai..Vera level...😀😀

    ReplyDelete
  7. 🤣🤣🤣🤣Sai baba ku jai..Vera level...😀😀

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிறுகதை - நடைபயிற்சி

சிறுகதை - கதவு